Friday, August 26, 2011

மீனாட்சி ஆத்தா

பேரு கொடுத்தவ  பெத்து எடுத்தவ
நீரு கொடுத்தது ஏன்
கண்ணீரு கொடுத்தது ஏன்
பேசிட வச்சவ பெருமை தந்தவ
மண்ணுக்கு போனது ஏன் - அந்த
விண்ணுக்கு போனது ஏன்
என்னை மட்டும் விட்டுபுட்டு
ஏன் தாயி மறஞ்சு விட்டா
எம்மனசு கோயிலிலே தெய்வமா நெறஞ்சுவிட்டா
ஊரு உலகம் வாழ்த்தும் அந்த
உத்தமி பெத்த என்னை
உசிரு நாளும் நெனைக்கும் அவ
உக்காந்திருந்த திண்ணை
கண்ணு பட்டு போகுமின்னு
திருஷ்டி சுத்தி போடுவா
வட்டியிலா சோறு கொட்டி
அள்ளி அள்ளி ஊட்டுவா
கடவுளானா தாயி - என்
கண்ணுல கம்மாயி
பத்துவகை பலகாரம்
பக்குவமா பண்ணுவா
வேரூரு போயிருந்தா
என்னையே எண்ணுவா
வானம் போல மனசு - அவ
வாழல நூறு வயசு