இதழோரம் எப்போதும்
இழையோடும் புன்னகை ...
கோபத்தில் கூட
மென்மை தெரியும் ...
நீங்கள்
பார்த்துபார்த்து பொருட்களை
பாதுகாப்பதே அழகாயிருக்கும்
எதற்கும் கலங்கிவிடும்
எளிதில் அழுதுவிடும்
பாசமாய்
மூன்று பிள்ளைகள் ...
பாதுகாவலர் நீங்கள்
பாசக்காவலர் சீதாமாமி ...
உங்களின் கூட்டுக்குள்
இருந்திருக்கலாமோ என்று
ஏங்கியிருக்கிறேன்
நான்...
நீங்கள்
பாபாவையும்
பற்றினீர்கள்
ஏசுவையும்
ஏற்றீர்கள்
காலன்
ஒரு இரக்கம் கெட்டவன்...
எப்போதும்
பாசமான பலர்மீதே
பாசக்கயிறு வீசுகிறான்
உங்களுக்கு
விரைவில் எட்டியது உயரம்
வாழ்க்கையிலே
எங்களுக்கு
விரைவில் கொட்டியது துயரம்
விழிகளிலே ...
nice anna..touching one
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஅருமை அற்புதம் ஆனந்த் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅண்ணன் வீசயத்தில் அனைத்தும் உண்மை
ReplyDelete